சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அசிங்கமாக பேசிய திரைப்பட நடிகை கஸ்தூரியை கைது செய்ய டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும். கஸ்தூரி அவர்கள் பொதுமனிப்பு கேட்க வேண்டும் என்றும் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன் வலியுறுத்தல்.
இதுகுறித்து தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா. அரவிந்தன் செய்தியாளர்களை சந்தித்தபோது, நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் நடைபெற்ற பிராமணர்கள் கூட்டத்தில் திரைப்பட நடிகை கஸ்தூரி அவர்கள் தெலுங்கு மக்கள் வரலாறு தெரியாமல் தெலுங்கு மக்களினுடைய மனதை துன்புறுத்தும் விதமாக மிகவும் மோசமாக பேசியுள்ளார். 300 ஆண்டுகளுக்கு முன் மன்னர்களின் அந்தபுரத்து சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் என்று பேசி தெலுங்கு மக்களை மிகவும் கேவலமாக பேசி உள்ளார் அவருடைய பேச்சு தேசிய தெலுங்கர் சிறுபான்மை கூட்டமைப்பு சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நடிகை கஸ்தூரி அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும்
தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு முதலமைச்சர்கள் வேண்டி கேட்டு கொள்கின்றோம் என்றார்.
மேலும் நேற்றைய தினம் கஸ்தூரி அவர்கள் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியிலே நான் தெலுங்கர்களை பற்றி பேசவில்லை தெலுங்கு ஒரு குடும்பத்தை பற்றி தான் பேசுகிறேன் என்று மேலும் அவர்களும் தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான். மேலும் தமிழக அரசையும் மிக கேவலமாக பேசி வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்து வரும் தமிழக முதலமைச்சரவர்கள் அனைத்து சமூகத்திற்குமே சரியான சமபங்களித்து அமைச்சரவை மிக விரிவாக நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரை மாற்றத்தில் கூட மிகத் தமிழகத்தில் உயர்ந்த துறையான உயர்கல்வித்துறைக்கு கோவை செழியன் அவர்களை உயர்கல்வித்துறை அமைச்சராக அறிவித்துள்ளார் என்று கூறிய நாகா அரவிந்தன், அனைவருக்கும் சமபங்களித்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வர் அவர்களையும் மிக அசிங்கமாக பேசி வரும் கஸ்தூரி அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தேசிய தெலுங்கர் சிறுபான்மை கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என்றார். மேலும் கஸ்தூரி அவர்கள் செயலை கண்டித்து சென்னையில் மிக விரைவில் தமிழக டிஜிபி அவர்கள் நேரில் சந்தித்து தெலுங்கர் கூட்டமைப்பு சார்பில் எங்களுடைய கோரிக்கை வைத்து அவர்கள் கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் டிஜிபி அவர்களிடம் மனு அளிக்க உள்ளோம் என்று கூறியதோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் பொது மன்னிப்பு கேட்டால் தான் இது இந்த பிரச்சனை தீர்வுக்கு வரும். இங்கு மட்டுமல்லாமல் ஆந்திரா தெலுங்கானா அனைத்து இடத்திலுமே தெலுங்கு பேசக்கூடிய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிக விரைவிலே சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். நிச்சயமாக இன்றைய தினம் ஆந்திராவிலே மிக அருமையான ஆட்சி செய்து வரும் சந்திரபாபு நாயுடுக்கும் எங்களுடைய கோரிக்கை வைக்கின்றோம். கஸ்தூரி அவர்கள் ஆந்திராவில் ஹைதராபாத்தில் குடியிருப்பதாக நேற்று பேட்டியில் உள்ளார். அவர் அங்கு நடிப்பதற்கு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஆந்திரா அரசியல் நாங்கள் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றோம் டாக்டர் நாக அரவிந்தன் தெரிவித்துள்ளார். பேட்டியின் போது, கௌரவத் தலைவர் ஆர் கே ஜெயக்குமார், செயலாளர் முரளி மற்றும் தொழிலதிபர் லட்சுமண குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 coment rios: