ஈரோடு மாவட்டம் தாளவாடி விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாளவாடி வட்டாட்சியர் அலுவலகத்தை இன்று (நவ.5) செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். இதையடுத்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியரிடம் வழங்கினர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தாளவாடி வட்டத்தில் உள்ள வனப்பகுதியின் எல்லை முழுவதும் போர்க்கால அடிப்படையில் பழைய ரயில்வே தண்டவாளத்தில் வேலி அமைக்கும் பணியை தொடங்கி விரைவாக நிறைவு செய்ய வேண்டும். தாளவாடி, ராமபுரம் பகுதியை ஒட்டிய கர்நாடக வனப்பகுதிக்கு ரயில்வே தண்டவாளத்தில் வேலி அமைக்கும் பணியை கர்நாடக வனத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
நெய்த்தாளபுரத்தில் இருந்து தலைமலை வரை மற்றும் மாவள்ளத்திலிருந்து குழியாடா பகுதி வரை உடனடியாக கேபிள் மூலம் மின்சாரத்தை கடத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவள்ளம், தேவர்நத்தம், குழியாடா பகுதி மக்கள் 24 மணி நேரமும் குழியாடா திம்பம் மலை பாதையை பயன்படுத்த வனத்துறை இடையூறு செய்யக்கூடாது. வனப்பகுதியில் உள்ள அனைத்து பாரம்பரிய கோயில்களும் வளமையாக உள்ள கோயில் நடைமுறையை தொடர்ந்து பயன்படுத்த வனத்துறை இடையூறு செய்யக்கூடாது.
திகனாரை பகுதியில் உள்ள ஜோரைக்காடு பகுதியை மாதிரி வேளாண் பகுதியாக அறிவித்து உடனடியாக செயல்படுத்த வேண்டும். வனப்பகுதிக்கு தண்டவாளத்தில் முழுமையாக வேலி அமைத்த பிறகு தண்டவாள வேலிக்கு வெளியே விவசாயிகள் பகுதிக்குள் வனத்துறையினர் எந்தவித செயலையும் மேற்கொள்ளக் கூடாது. முதியனூர் சிக்கராமன் யானையால் கொல்லப்பட்டதற்கு இழப்பீடாக வழங்குவதாக அரசு தரப்பில் உறுதி அளித்த 15 லட்சம் ரூபாய் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும்.
சிக்கராமன் மனைவிக்கு அரசு தரப்பில் உறுதி அளித்தபடி அரசு பணியை உடனடியாக வழங்க வேண்டும். வனவிலங்குகள் மனிதர்கள் மோதலின் போது உயிரிழக்கும் மக்களுக்கு கர்நாடகாவில் வழங்குவது போல 15 லட்சம் ரூபாயை தமிழக வனத்துறை வழங்க வேண்டும். வனப்பகுதிக்குள் உள்ள இடுகாட்டில் காலங்காலமாக நடைமுறைபடுத்தப்படும் உடல்கள் அடக்கம் செய்யும் பணிக்கு எக்காரணம் கொண்டும் வனத்துறை இடையூறு செய்யக்கூடாது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போல தாளவாடி வட்ட விவசாயிகள் 24 மணி நேரமும் மலைப்பாதையை பயன்படுத்திக் கொள்ள உடனடியாக பாஸ் வழங்க வேண்டும். காலங்காலமாக பழங்குடி மக்கள் வனத்துறை சென்று சேகரித்து வந்து அனைத்து பொருட்களையும் தொடர்ந்து வனத்துக்குள் சென்று சேகரிப்பதற்கு வனத்துறை இடையூறு செய்யக்கூடாது.
தாளவாடி வட்டத்தில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது போல தாளவாடி வட்ட விவசாயிகள் 24 மணி நேரமும் மலைப்பாதையை பயன்படுத்திக் கொள்ள உடனடியாக பாஸ் வழங்க வேண்டும். காலங்காலமாக பழங்குடி மக்கள் வனத்துறை சென்று சேகரித்து வந்து அனைத்து பொருட்களையும் தொடர்ந்து வனத்துக்குள் சென்று சேகரிப்பதற்கு வனத்துறை இடையூறு செய்யக்கூடாது. தாளவாடி வட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் கூட எக்காரணம் கொண்டும் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: