ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் ஏராளமான தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கிருந்து வெளியேறும் கழிவு நீரினால் நீர்நிலைகள் மாசுபடுவதோடு புற்றுநோயின் தாக்கமும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு ஈரோடு நகரை பசுமை நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் ஈரோடு அல் அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஈரோடு எக்கனாமிக் சேம்பர் சார்பில் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி அவற்றை வளர்க்க வேண்டியது அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு ஈரோட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் டாக்டர். அப்துல்லா தலைமை வகித்தார்.
ஈரோடு மாநகராட்சியின் துணை மேயர் செல்வராஜ், மாநகர மன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அல் அமீன் பள்ளி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ரியாஜ் அலி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில், அல் அமின் முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பள்ளப்பட்டி கவுன்சிலர் சாகுல் ஹமீது, முன்னாள் மாணவரும் எக்கனாமிக் சேம்பரின் செயலாளர் பத்ரு மைதீன், அல் அமீன் பள்ளியின் தாளாளர் ஆடிட்டர் அயூப், அல் அமீன் சங்கத்தின் செயலாளர் சுஜாத், தமிழ்நாடு ஜமாத்துல் உலமாக்கள் சபையின் தலைவர் பைஜீ ரகுமான், எக்கனாமிக் சாம்பரின் சமூக மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முகமது பிலால், எல்லப்பாளையத்தை சேர்ந்த அல் அமீன் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உலமாக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்,
மரங்களை நடுவதன் மூலம் இயற்கை வளத்தை பெருக்கி ஈரோடு நகரை பசுமையாக மாற்ற வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. வாழை , தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை வளர்ப்பதன் மூலம் பொது மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏந்தி நின்றனர் .
இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது. வரும் ஓராண்டிற்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை ஈரோடு நகரில் நடுவதற்கு தீர்மானித்துள்ளதாக நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
0 coment rios: