சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
உள் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, டிசம்பர் 6ல் டெல்லியில் மாபெரும் பேரணி மற்றும் கருத்தரங்கம். தமிழ்நாடு மத்திய, மாநில அரசு மற்றும் பொதுதுறை SC, / ST, / MBC ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி தகவல்..
பட்டியலின மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும்
தமிழ்நாடு மத்திய, மாநில அரசு மற்றும் பொதுதுறை SC, / ST, / MBC ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சரஸ்ராம் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்,
பட்டியலின மக்களின் அடிப்படை உரிமையை பறிபோவதை கண்டித்தும், மக்கள் தொகை புதிய கணக்கீட்டை கண்டறிந்து பட்டியலின மக்களுக்கு 25% இட ஒதுக்கீட்டை கல்வி பொருளாதாரம் வேலை வாய்ப்பு மற்றும் அரசியலில் ( சட்டமன்றம் பாராளுமன்றம் உள்ளாட்சி ) வழங்கிட வலியுறுத்தியும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுதுறைகளில் துறைகளில் பட்டியலின , பழங்குடியினர் காலி பின்னடைவு ,( Backlog vacancies ) 2 லட்சத்திற்கும் மேல் உள்ளதை உடனே நிரப்பிட வலியுறுத்தியும் ஆலோசிக்கப்பட்ட கூட்டத்தில், பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான கிரீமிலேயர் திட்டத்தை கைவிட வலியுத்தியும், இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புது டில்லியில் வரும் டிசம்பர்- 6ல் பேரணியும், தொடர்ந்து டிசம்பர்-7 ல் கருத்தரங்கம் நடத்தப்படுவது என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்திய பட்டியலின பழங்குடி மக்களின் பாதுகாவலர் டாக்டர் ஐயா. K கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் மத்திய. மாநில அரசுகளின் கவன ஈர்ப்பு பேரணியும், கருத்தரங்கமும் வெற்றி பெற பட்டியலின/ பழங்குடி ஊழியர்களே/ வெகு ஜன மக்கள் ஆகியோர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
( நிறுவனர்- தலைவர்- அம்பேத்கர்.ஜனசக்தி கட்சி மற்றும் ஜேசுபாதம், பழ.முரளிதரன், தமிழமுதன், ராஜசேகர் கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
0 coment rios: