திருச்சபையில் தேர்தலில் தோற்றவர்கள் பணி செய்ய விடாமல் தடையாக இருப்பதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஈரோடு சிஎஸ்ஐ திருச்சபையை நிர்வாகிகள் புகார்.!
சிஎஸ்ஐ தென்னிந்திய திருச்சபையின் 24 மண்டலங்களில் கோவை மண்டலம் பெரியது என்பதால் அதில் இருந்து ஈரோடு, சேலம் பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த, ஆண்டு புதிய திருமண்டலம் உருவாக்கப்பட்டு தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் தடையாணை ஏதும் இல்லாத நிலையில், தேர்தலில் தோற்றவர்கள் தங்களை பணி்செய்ய விடாமல் தடுப்பதாக கூறி திருமண்டல புதிய நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஈரோடு வருவாய் கோட்டாச்சியரை சந்தித்து மனு அளித்த அவர்கள், நிர்வாக ரீதியாக பிரச்சனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன்,
சிஎஸ்ஐ திருமண்டலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்களை செயல்பட விடாமல் தோல்வியடைந்தவர்கள் தடுப்பதாகவும், திருச்சபையில் சேவைகள், கல்வி, மருத்துவ பணிகள் நடைபெறுவதால் நிர்வாக ரீதியாக நிறுத்துவதற்கு முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் தேர்தலில் தோற்றவர்கள் சிறு கூட்டமாக கூடி நிர்வாக கூட்டங்களை நடத்த விடாமல் ரகளை செய்கின்றனர் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம்.
இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தீர்ப்பு வழங்கியுள்ளார் திருப்பணி ஊழியம் வழிபாடு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளார் இடையூறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என கோட்டாட்சியர் கூறியுள்ளார் கிறிஸ்துமஸ் புத்தாண்டு நெருங்கும் வேலையில் அவற்றை தடுக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இவ்வாறு அவர்கள் செயல்படுகின்றனர் என கூறினார்.
0 coment rios: