சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர்களின் பாதுகாப்பை கருதி ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவரம்பன் கோரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் வழக்கறிஞர் கண்ணனை அறிவாளால் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்ணன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் கொடூரமாக தாக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவரம் தலைமையில் நீதிமன்ற வாயில் முன்பாக நடைபெற்ற இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அரசை வலியுறுத்தும் விதமாக பணிபுறகணிப்பில் ஈடுபட்டுள்ள குற்றவியல் வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்திய நபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் குற்றப்பத்திரிகை உடனடியாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிகள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் இமயவரம்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர் கதையாக படுகொலை செய்யப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், வழக்கறிஞர்களின் பாதுகாப்பை கருதி ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் துப்பாக்கி வைத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறிய அவர், வழக்கறிஞர்களின் பாதுகாப்பை கருதி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை சென்னை உயர்நீதிமன்றம் பார் கவுன்சிலிருக்கும் தமிழக உள்துறை செயலாளருக்கும் கேள்வி எழுப்புவது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு உயர்நீதிமன்றத்திற்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், ஒரு சில மாநிலங்களில் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றியது போல தமிழக அரசும் விரைவில் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதைப் போல பார் கவுன்சிலும் தமிழக அரசும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றுவதற்கு உண்டான அறிக்கையை வரும் ஜனவரி மாதத்திற்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இமையவரம்பன் கேட்டுக் கொண்டார்.
0 coment rios: