சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஓய்வூதியர்களுக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் சேலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் இன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயமாலை மேரி மற்றும் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி உட்பட மாவட்ட நிர்வாகிகள் வைத்தியலிங்கம் செல்லதுரை மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து முழக்கமிட்ட அவர்கள் அரசாணை 343.. ஐ ரத்து செய்து ஓய்வூதிய இயக்குனரகத்தை தொடர்ந்து தனித்துறையாகவே தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும், ஓய்வூதிய இயக்குனர் அகத்தை கருவூலத்துறையோடு இணைக்கும் முதல்வர் தனது இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் மற்றும் ஓய்வூதியர் நலனுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசை கண்டிக்கிறோம் எனவும்தமிழகம் முழுவதும் நடைபெறும் தங்களது இந்த கோரிக்கையை குறித்து தமிழக அரசு செவிசாய்கள் மறுக்கும் பட்சத்தில் மாநில குழு எடுக்கும் முடிவை பொருத்து அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என்று அந்த சங்கத்தில் மாநில செயலாளர் ஜெயமாலை மேரி சேலத்தில் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளானூர் கலந்து கொண்டனர்.
0 coment rios: