சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது சேலத்தில் வன்னியர் சங்கம் சார்பில் புகார்.
வன்னியர் சங்க மாநில தலைவரை கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் விடுதலை
சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பேசி உள்ளார்.இதனை கண்டித்து வன்னியர் சங்கம் சார்பில்
தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் விடுதலை சிறுத்தை நிர்வாகி மீதுநடவடிக்கை
எடுக்க கோரி புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சேலத்தில் வன்னியர் சங்கம் சார்பில் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில்
பா.ம.க மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ முன்னிலையில் வன்னியர் சங்கமாநில செயலாளர் கார்த்தி தலைமையில்
உதவி கமிஷனர் நிலவழகன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் புகார் மனு
அளித்தனர். அப்போது அவர்கள் கூறும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை குண்டர் சட்டத்தில் உடனடியாக
கைது செய்ய வேண்டும் என்றனர். இதில் மாவட்டத் தலைவர் கதிர்ராசரத்தினம்,பசுமை தாயகம் மாநில இணைச் செயலாளர்
சத்ரிய சேகர், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கே.சிவா, மாவட்ட தலைவர் ஏ.கே.ஆறுமுகம், அமைப்பு செயலாளர் வக்கீல் குமார், பகுதி செயலாளர் சிவா, பகுதி தலைவர் ஈஸ்வரன், இளைஞர் அணி விஜி, சங்கர், கலை, அண்ணாமலை, பூபதி, சின்னச்சாமி உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.
0 coment rios: