சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் கருமாபுரத்தில் அரசு விதி முறைகளுக்கு மாறாக 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பாரகன் பாலிமர் நிறுவன கட்டிடங்களை அகற்ற வேண்டும். இந்த ஊழலுக்கு துணை போன வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய இயக்குனருக்கு கோரிக்கை.
தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய இயக்குனர் ஆகியோர்களுக்கு கோரிக்கையாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனு குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சரசுஸ்ராம் ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருமாபுரம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேரகன் பாலிமர் நிறுவனத்திற்கு சொந்தமாக இயங்கி வரும் நிறுவனத்தின் 2 வரைபடங்களுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து, அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் இரண்டு முறை புகார் மனு அளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் விசாரணைக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியும் அந்த துறையை சார்ந்த மற்ற அதிகாரிகளும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை மனுதாரருக்கு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் உள்ளபடி DDCP அப்ரூவல் என்பது குறைந்தபட்சம் அந்த கிராமப்புறத்தில் அந்த ஊராட்சி பகுதியில் குறைந்தபட்சம் 2000 சதுர அடிக்கு மேல் அனுமதி வழங்க அவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் முறைகேடாக சம்பந்தப்பட்ட பாரகன் பாலிமர் நிறுவனத்திற்கு 2 லட்சம் சதுர அடி நிலத்திற்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
0 coment rios: