சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வ லிங்கத்திற்கும், எதிர்க்கட்சித் தலைவருமான யாதவ மூர்த்தி கும் இடையே கடும் வாதத்தினால் மாமன்ற இயல்பு கூட்டத்தில் கடுமையான பரபரப்பு.
சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ரஞ்சித் சிங் மற்றும் துணை மேயர் திருமதி சாரதாதேவி ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது.
60 கூட்டங்களை உள்ளடக்கிய மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோட்ட பிரச்சனைகள் குறித்து ஒவ்வொருவராக தங்களது ஆதங்கங்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் பதிவு செய்த வண்ணம் இருந்தனர்.
அப்பொழுது சேலம் மாநகராட்சியின் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான தெய்வ லிங்கம் தனது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் செய்ய தவறிய சில கருத்துக்களை வெளிப்படுத்தக் கொண்டிருக்கும்போது, அதாவது சேலம் பழைய பேருந்து நிலையம் அகற்றப்பட்டு புதிய இரண்டு அடுக்கு அடுக்கு பழைய பேருந்து நிலையமாக அங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடைகளுக்கு உண்டான உரிமையாளர்களும் தொழிலாளர்களும் தங்களது இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு உண்டான வசதி இல்லை என்று குறிப்பிட்டு பேசும்போது, திடீரென்று குறிக்கிட்டு பேசிய சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவை சேர்ந்த யாதவமூர்த்தி கடும் கண்டனத்தை தெரிவித்தார். காரணம் பழைய பேருந்து நிலையம் ஈரடுக்கு பேருந்து நிலையமாக உருவாக்க திட்டமிட்டு அதற்கான பூமி பூஜையை போட்டவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதற்காக குறை கூறி பேசுவதா என்று பேசும்போது சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக கடும் அமளி ஏற்பட்டது.
கடுமையான அமலுக்கும் இடையே மாமன்ற உறுப்பினர் தயவலிங்கம் தனது கோரிக்கைகளை முன்வைத்து மாநகராட்சி மேயர் ஆணையாளர் மற்றும் துணை மேயர் ஆகியோரிடம் ஒப்புதலை பெற்று இடம் அமர்ந்தார்.
இது சேலம் மாமன்ற கூட்டத்தில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம். என்றாலும் கூட வழக்கம் போல அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 coment rios: