சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பதாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் அவலத்தையும் பணியிடங்களையும் பாதுகாத்திட வலியுறுத்தியும் தங்களது போராட்டம் வெற்றி அடைய வேண்டி மூன்றாம் கட்டமாக துவங்கியுள்ள இந்த போராட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கியது. சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற எந்த போராட்டத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவர் அர்த்தனாரி கலந்துகொண்டு, தங்களது ஒன்பது அம்ச கோரிக்கைகளை குறித்து விளக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், சுமதி கோபாலகிருஷ்ணன் மற்றும் பிரபு உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், முதுநிலை வருவாய் அலுவலர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை கலைத்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் உடனடியாக வெளியிட வேண்டும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடப்பாண்டிற்கான மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துணையினர் முழக்கங்களை எழுப்பினர்.
வருவாய் துறை அலுவலர்களின் இந்த போராட்டத்தின் காரணமாக சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை தொடர்பான அத்தனை பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுவதோடு தொடர்ந்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் மாநில தலைவர் அர்த்தநாரி தெரிவித்தார்.
0 coment rios: