சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகர பொறியியல் பிரிவு அடிப்படை பணியாளர்கள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
சேலம் மாநகர பொறியியல் பிரிவு அடிப்படை பணியாளர்கள் நல சங்கத்தின் சார்பில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகராட்சி அலுவலகம் பின்புறமாக உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வழங்க வேண்டிய பங்காதாயம் தொகையினை நிலுவையுடன் சிக்கன நாணய கூட்டுறவு சொசைட்டி மூலம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் வழங்கப்படும் வாரிசு வேலையினை ஐந்து சதவீதமாக குறைப்பு செய்ததை மீண்டும் 25 சதவிகிதமாக உயர்த்தி தர வேண்டும் மற்றும் பேங்க் ஆபரேட்டர்கள் 24 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறாத பட்சத்தில் தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
0 coment rios: