சேலம்:
S.K. சுரேஷ்பாபு.
பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்தை கண்டித்து சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்..
அதானி ஊழலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் ராமதாசுக்கு வேறு வேலை இல்லாததால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது எனக் கூறியிருந்தார். முதல்வரின் இந்த கருத்தை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாமகவின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்எல்ஏ தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வரை கண்டித்து கோசங்களை எழுப்பிய பாமகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீஸாருக்கும் பாமகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து அருள் எம்எல்ஏ உள்பட பாமகவினர் சாலையில் அமர்ந்து ராமதாஸ் குறித்த கருத்திற்கு முதல்வர் மன்னிப்பு கோர வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் குண்டு கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி அருகே இருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
0 coment rios: