சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தில் சில அதிகாரிகள் INTUC தொழிற்சங்கத்தன் சில நிர்வாகிகள் பல ஆண்டுகளாக பட்டியலின ஊழியர்கள் மீது பொய்யான புகார்களை தயார் செய்து நிர்வாகத்திடம் தபால் மூலம் அனுப்புவது வன்மையாக கண்டிக்கிறோம் என்று தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் சரஸ்ராம் ரவி மற்றும் விஸ்வநாத் ஆகியோர் தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த புகார் குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் சரஸ்ராம் ரவி மற்றும் விஸ்வநாத் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் தமிழ்நாடு மின்வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் நிர்வாகத்தின் சில அதிகாரிகள் INTUC தொழிற்சங்கத்தின் சில நிர்வாகிகள் பல ஆண்டுகளாக பட்டியலின ஊழியர்கள் மீது பொய்யான புகார்களை தயார் செய்து நிர்வாகத்திடம் தபால் மூலம் அனுப்புகின்றனர்.
மின் வாரிய நிர்வாகமோ புகார் அனுப்பிய நபரை நேரில் அழைத்து விசாரணை செய்யாமலே, உண்மை நிலை கண்டறியாமல் பட்டியல் இன ஊழியர்கள் மீது நேரடியாக விசாரணை நடத்துவது ஒருவகை வன்கொடுமையே. சேலம் மாவட்டம் முழவதும் பல நூறு புகார்கள் வந்தபோதும் அவற்றை கண்டுகொள்ளாமல், விசாரணை செய்யாமல் கிடைப்பில் வைக்கும் நிர்வாகம், பட்டியலின ஊழியர்கள் மீது வரும் பொய் புகார்கள் மீது ஆர்வம் காட்டுவது நிர்வாக சீர்கேட்டை உறுதிபடுத்துகின்றது. என்று அறிக்கையின் வாயிலாக கேள்வி எழுப்பி உள்ள அவர்கள். விவசாயிகள் பண முதலாளிகள் அரசியல்வாதிகள் வியபாரிகள் தொழில் நிறுவனங்கள் ஆகியோரிடம் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறாமலேயே வேலை செய்துகொடுத்து மாதம் பல லட்சங்கள் வருடம் பல கோடிகள் மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்தி வருவதை கண்டுகொள்ளாத நிர்வாகம்.
திருட்டுதனமாக டிரான்பாம் மாற்றுவது மின் இணைப்பு அளிப்பது மின்கேப்பாசிட்டி மாற்றுவது விவசாய மின்இணைப்பு உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெறாமல் கையூடு பெற்று ஊழலில் ஊறிபோவது. இவை எல்லாம் கண்டுகொள்ளாத நிர்வாகம். இதனால் மின்வாரியத்துக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படுகின்றது.
இவற்றை மின்வாரிய தலைமை சென்னை நிர்வாகம் விசாரணை செய்யுமா என்று கேள்வி எழுப்பி விடுதோடு, மின்வாரிய விஜிலன்ஸ் விசாரணை மேற்கொள்ளுமா என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மிகக் கடுமையான போராட்டத்தை மின்வாரியத்திற்கு எதிராக நடத்தப்படும் என்றும் அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 coment rios: