சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தீர்ப்பளித்து 1000 ஆவது நாளில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து சேலத்தில் பாமக சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 ஆவது நாளில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் இன்று நடைபெற்றது. சேலம் மாநகர் மாவட்ட பாமக சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கதிர் இராசரத்தினம், பசுமைத்தாயகர் மாநில இணை செயலாளர் சத்திரிய சேகர் மற்றும் மாணவரணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மேல் முறையிட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு, போதிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி வழங்கியது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 ஆவது நாள் ஆகியும் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு சம்பந்தமாக 2024 டிசம்பர் 24 ஆம் நாளுடன் 1000 நாட்கள் ஆகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்பொழுது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று அறிவித்தது பெருந் துரோகம் என்று ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. அது மட்டுமில்லாமல் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எடுப்பினர்.
சேலத்தில் நடைபெற்ற போராட்டம் குறித்து சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா அருள் இராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில் வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை தங்களது போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மாவட்ட பொறுப்பாளர்கள் பகுதி ஒன்றிய செயலாளர்கள் மற்றும் தலைவர்கள், டிவிஷன் பொறுப்பாளர்கள் என மாவட்ட முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றங்கள்.
0 coment rios: