சேலம்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கை காட்டும் கட்சியை தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். அவரது பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் ரஜினிக்கு வேண்டுகோள்..
தமிழக திரையுலகின் முடி சூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா உலக ரசிகர்களால் இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலத்தை சேர்ந்த தொழிலதிபரும் மிகச் சிறந்த ஆன்மீகவாதியும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்மான பாரப்பட்டி கனகராஜ் தலைமையில் அவரது ரசிகர்கள் இன்று அவர்கள் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் ஒரு பகுதியாக சேலம் செவ்வாய்பட்டையில் உள்ள வெளியேறுந்தோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாரப்பட்டி கனகராஜ் தலைமையில் அவரது ரசிகர்கள் இன்று காலை வெளியிலிருந்து ஒரு பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்ததுடன் வெளி இழந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டிகளை வழங்கி மகிழ்கிறனர். பிறந்தநாளின் சிறப்பம்சமாக இன்று ரஜினிகாந்த் மம்மூட்டி ஆகியோர் இணைந்து நடித்து உலக அளவில் மிக பிரம்மாண்ட வெற்றி பெற்ற தளபதி திரைப்படம் இன்று மீண்டும் சேலம் மாநகரில் உள்ள பல்வேறு முக்கிய திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி சேலம் மாநகரில் உள்ள முக்கியமான பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் அதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி ஏழை எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக நடப்பாண்டும் அதே போன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், நற்பணி மன்றம் என்ற பெயரில் சேவை செய்ய தொடங்கப்பட்ட அந்த அமைப்பு ரஜினிகாந்தின் உடல்நிலை மற்றும் பல்வேறு காரணங்களால் அதனை தொடர முடியாமல் நிறுத்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாகவும் ஏற்கனவே ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். இதை எடுத்து ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக இருந்த நிலையில் அப்போதும் பல்வேறு காரணங்களால் அவரது அந்த ஆசை நிறைவேற வில்லை என்றும் தெரிவித்ததோடு அவரது தமிழக மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று கட்சி தொடங்க இருந்த நிலையில் கைவிடப்பட்டது. என்றாலும் அவரது சிந்தனையில் அனைத்தும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர் வாயிலாக அவரது சிந்தனைகள் தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய திட்டங்கள் அனைத்தும் முழுமையாக சென்றடைய யார் ஒப்புதல் தெரிவிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் வாயிலாக ஆட்சியும் அமைய வேண்டும் என்று பிறந்தநாள் வாழ்த்துக்களோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தனது கோரிக்கையையும் முன் வைத்தார்.
வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாரை கை காட்டுகிறாரோ அந்த கட்சி ஆட்சி அமைக்க தாங்கள் எந்த ஒரு பிரதிபலனும் இல்லாமல் உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களான குரல் நத்தம் சந்திரசேகர், சுக்கம்பட்டி பிரபு, குருமூர்த்தி, திருச்சி பாளையம் ரமேஷ், வீரபாண்டி சித்தன், ஜெகநாதன், கார்த்தி, நரேஷ், வினோத் மற்றும் யாசின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 coment rios: