சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா. சேலம் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்.
தமிழக திரை உலகமான கோலிவுட்டில் தற்பொழுதும் முடி சூடா மன்னனாக திகழ்ந்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களால் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சூப்பர் ஸ்டார் நீடூழி வாழ பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டும் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவுகள் வழங்கும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேலம் மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைமை அலுவலகத்தில் அவரது பிறந்த நாள் விழா வெகு உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தலைமை நற்பணி மன்ற செயலாளர் செந்தில் அறிவுறுத்தலின் பேரில்
நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் தங்களது குடும்பத்தாருடன் கலந்து கொண்டு கேக் வெட்டி உற்சாகமடைந்து அவர் 100 ஆண்டு காலம் நீடூழி வாழ தங்களது வாழ்த்துக்களை ஓசமிட்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து தலைமை மன்ற நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கோவில்களிலும் பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: