சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இன்னும் 24 மணி நேரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.மு. இமயவர்மன் கடும் எச்சரிக்கை.
இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்தது முதல் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்ட வடிவங்களில் இன்றைய அளவும் எந்தவிதமான மாற்றங்களையும் செய்யாமல் அப்படியே இந்திய திருநாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் விடிவெள்ளி என்று போற்றப்படும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் இன்றிய அளவிலும் பல்வேறு உலக நாடுகளில் தற்பொழுது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்படி போற்றுதலுக்குரிய புரட்சியாளர் அம்பேத்கரை நடுவனஅரசினுடைய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில், அவரது புகழை சீர்குலைக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார்.
இது நாடு அறிந்த விஷயமே. இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோதி சப்பை கட்டு கட்டி அமித்ஷா அவர்களை காப்பாற்றும் நோக்கோடு அதற்கான விளக்கத்தை சுட்டி காட்டியதை வேடிக்கையை ஒன்றாக உள்ளது என கூறி நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராகவும் அமிர்தாவுக்கு எதிராகவும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் சார்பில் வழக்கறிஞர்கள் இன்று அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய நடுவன அரசினுடைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 24 மணி நேரத்திற்குள் அவரை பதவி நீக்கம் செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தவறும் பட்சத்தில் தங்களது அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் தலைமையில் நீதிமன்ற நுழைவு வாயில் பகுதியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் குறித்து இழிவு படுத்தி பேசிய அமித்ஷா மற்றும் நடுவன அரசுக்கு எதிராக கடுமையான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவர்மன் கூறுகையில், அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் காரணமாகத்தான் இன்று அமித்ஷா அந்த பொறுப்பில் இருந்து வருவதாகவும் அது தெரியாமல் அவரது வரலாற்றுச் சாதனைகள் தெரியாமல் கண்மூடித்தனமாக நாடாளுமன்றத்தில் பேசியது கடுமையான கண்டனத்திற்கு உரியது என்றும், ஏற்கனவே நடுவுன அரசின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் தற்பொழுது அமைச்சர் பேசியுள்ளது இந்திய திருநாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், இன்னும் 24 மணி நேரத்தில் அமித் ஷாவை கைது செய்து அவரது பதவியை நீக்கி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடுவனரசு கைது செய்ய தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களாக மிகப்பெரிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டம் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நுழைவாயில் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக நீதிமன்ற பணிகள் துவங்கும் பொழுது பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: