வெள்ளி, 20 டிசம்பர், 2024

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவிலான ரயில் மறியல் போராட்டம் இருக்கும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கடும் எச்சரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்து, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவிலான ரயில் மறியல் போராட்டம் இருக்கும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கடும் எச்சரிக்கை.

இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்தது முதல் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்ட வடிவங்களில் இன்றைய அளவும் எந்தவிதமான மாற்றங்களையும் செய்யாமல் அப்படியே இந்திய திருநாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் விடிவெள்ளி என்று போற்றப்படும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இயற்றிய சட்டங்கள் இன்றிய அளவிலும் பல்வேறு உலக நாடுகளில் தற்பொழுது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்படி போற்றுதலுக்குரிய புரட்சியாளர் அம்பேத்கரை நடுவன அரசினுடைய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில், அவரது புகழை சீர்குலைக்கும் வகையில் அவதூறாக பேசியுள்ளார். இது நாடு அறிந்த விஷயமே. இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோதி சப்பை கட்டு கட்டி அமித்ஷா அவர்களை காப்பாற்றும் நோக்கோடு  அதற்கான விளக்கத்தை சுட்டி காட்டியதை வேடிக்கையை ஒன்றாக உள்ளது என கூறி நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராகவும் அமிர்தாவுக்கு எதிராகவும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பில் அம்பேத்கரிய, பெரியாரியாரிய உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அம்பேத்கரின் திருவுருவப்படத்தை ஏந்தியும் கண்களில் கருப்பு துணிகளை கட்டியும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஏ டி ஆர் சந்திரன், மனித உரிமைகள் கட்சியின் தலைவர் பூமொழி, மக்கள் தேசம் கட்சியின் மாநில செயலாளர் சுலைமான் உள்ளிட்டோர்  முன்னிலை வகித்தனர். அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய நடுவன அரசினுடைய  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். 
செய்ய தவறும் பட்சத்தில் தங்களது அடுத்த கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டமாக இருக்கும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணல் அம்பேத்கர் குறித்து இழிவு படுத்தி பேசிய அமித்ஷா மற்றும் நடுவன அரசுக்கு எதிராக கடுமையான கண்டன கோஷங்களை எழுப்பினர். 
ஆர்ப்பாட்டம் குறித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை கூறுகையில், அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் காரணமாகத்தான் இன்று அமித்ஷா அந்த பொறுப்பில் இருந்து வருவதாகவும் அது தெரியாமல் அவரது வரலாற்றுச் சாதனைகள் தெரியாமல் கண்மூடித்தனமாக நாடாளுமன்றத்தில் பேசியது கடுமையான கண்டனத்திற்கு உரியது என்றும், ஏற்கனவே நடுவுன அரசின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் தற்பொழுது அமைச்சர் பேசியுள்ளது இந்திய திருநாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும், அமித் ஷாவை கைது செய்து அவரது பதவியை நீக்கி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடுவனரசு கைது செய்ய தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களாக மிகப்பெரிய அளவில் ரயில் மறியல் போராட்டம் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையப் பகுதியில் நடைபெற்ற எந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடுமையான பரபரப்பு காணப்பட்டது.





শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: