சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மாற்றுத்திறனாளிகளுடன் கிறிஸ்மஸ் விழா கொண்டாடி 300 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிழாவில்அகில உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளி அறக்கட்டளை, ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் விங்ஸ் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவை அமைப்புகள் இணைந்து நடத்திய கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒய் எம் சி ஏ ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ் தலைவர் கர்லின் எபி தலைமையில் நடைபெற்ற விழாவில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் துணை மேயர் சாரதா தேவி உட்பட விழாவை இணைந்து நடைபெற சமூக சேவை அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவை கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களை கொண்டாடும் வகையில், விழாவை இணைந்து நடத்திய அமைப்புகளின் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பயனாளிகள் அனைவரும் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பியை அணிந்து பங்கேற்ற விழாவில், பிரம்மாண்ட கேக் வெட்டி சிறப்பு விருந்தினர்களுக்கும் பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 300 பயனாளிகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்களுக்கான நலத்திட்ட உதவிகளை சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் துணை மேயர் சாரதா தேவி ஒலி டோர் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
இந்த விழாவில் விழாவினை இணைந்து நடத்திய பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: