சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் பழங்குடியின பெண் தனது கணவர் மற்றும் அவர்களது குடும்பத்தார் மீது கொடுக்கப்பட்ட குடும்ப வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முயற்சியின் காரணமாக ஹரிணியை பணம் கேட்டு துன்புறுத்த மாட்டேன் என கணவர் வீட்டார் உறுதி.
சேலம் ஜாகிர் அம்மா பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு துறை அதிகாரியின் மகள் ஹரிணி. பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த இவருக்கும், ஏற்காட்டைச் சேர்ந்த மணி என்பவரது மகன் சந்திர சந்திரகுமார் ஆகியோருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 2022 முறைப்படி திருமணம் நடைபெற்றது. கணவர் சந்திரகுமார் அவரது சகோதரர் சுப்ரமணி மற்றும் மணிகண்டன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு அவர்களின் தூண்டுதலின் பெயரில் மனைவி ஹரிணியை பல வகையில் கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளார். இதனிடையே பல லட்சம் ரூபாய் ஹரிணியின் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி உள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் துன்புறுத்தலையும் கனவால் ஏற்படும் தாக்குதலையும் சமாளிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட பெண் ஹரிணி தனது குடும்பத்தாருடன் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவியை அறிவுறுத்தலின் பேரில், சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த எட்டாம் தேதி புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் வன்கொடுமை செய்து அச்சுறுத்தி வரும் தனது கணவர் மற்றும் அவரது சகோதரர்கள் சுப்ரமணி, மணிகண்டன் மற்றும் கணவரின் பெற்றோர் ஆகியோரை கைது செய்து முறையாக விசாரித்து அவர்கள் மீது பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சட்டபடி நடவடிக்கை எடுத்து தனது 8 மாத குழந்தைக்கும் சட்ட பாதுகாப்பும், சமூக பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என்றும்
பெண் ஹரிணி தனக்கும், எனது 8 மாத குழந்தைக்கும் ஏற்படும் உயிர் இழப்பு ஏனைய அத்தனை இழப்பிற்கும் சுப்ரமணி, மணிகண்டன் மற்றும் எனது கணவரே பொறுப்பாக இருப்பதால், சமூக நீதி வழங்கிடகோரி இந்த புகார் மனுவை அளிக்கின்றேன் கண்ணீர் மல்க குறிப்பிட்டு இருந்தார்.
பழங்குடியின பெண் அளித்த புகாரின் பேரில் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஹரிணி மற்றும் சந்திரகுமாரின் குடும்பத்தினரை மங்களம் காவல் நிலையம் நேரில் வரவழைக்கப்பட்ட சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முறையான விசாரணை மேற்கொண்டார்.
முடிவில் இனிமேல் ஹரிணியை துன்புறுத்தி பணம் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டேன் நல்ல முறையில் மனைவியை வைத்து வாழ்ந்து கொள்கிறேன் என்று சந்திரகுமார் மற்றும் அவரது குடும்பத்தார் உறுதி அளித்தனர். மேலும் மாப்பிள்ளை வீட்டார், கணவர் ஆகியோர் ஹரிணியை பாதுகாப்பாக பார்த்து கொள்வதாகவும், குழந்தையை பராமரித்து கொள்வதாகவும் உறுதி அளித்து முடித்து கொண்டனர். பழங்குடியின குடும்பத்தை ஒன்று சேர்த்து உதவிய கூட்டு நடவடிக்கை குரவிற்கு இரு குடும்பமும் நன்றி தெரிவித்தனர்.
உடன், ஏ பி பாலு, ரமேஷ்குமார் வழக்கறிஞர், பாலன் மற்றும் இமான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 coment rios: