மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடுகிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம், மாவட்ட செயலாளர் எ.ஜாவித் ஃபஜல் தலைமையில், மாவட்ட அவை தலைவர் மு.முஹமது ஹாரிஸ் முன்னிலையில் நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மஜக மாநிலதுணைச் செயலாளர் அந்தியூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயக வர்த்தக அணியின் மாநில துணை செயலாளர் ஈரோடு எக்சான், ஆகியோர் பங்கேற்று கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் புதிய கிளை நிர்வாகத்தை அமைப்பது, மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் செயற்குழு, பொதுக்குழு நடத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தினகரன், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.திலீப் குமார், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ஈ.ஐ.முகமது அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு பூம்புகார் நகர் பகுதியில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பயிலும் மதரஸா செயல்பட்டு வருகிறது, அதன் அருகில் டாஸ்மாக் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அந்த வழியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர், எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் சாய, தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் சாய, தோல் கழிவுநீர், நீர்நிலைகளில் கலப்பதால், கேன்சர் உள்ளிட்ட நோய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே நீர்நிலைகளில் சாய, தோல் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் முடிவில் இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் கே.தினகரன் நன்றி தெரிவித்தார்,
0 coment rios: