இதற்கு, கிராம நிர்வாக அலுவலர் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத தனசேகரன் இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை பள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு தனசேகரன் கொண்டு சென்றார்.
அதைத்தொடர்ந்து, பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்த போது, திட்டமிட்டபடி அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய பெருந்துறை வட்ட மண்டல துணை வட்டாட்சியர் நல்லசாமி அங்கு வந்தார். தொடர்ந்து, அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: