சேலம.
S.K. சுரேஷ் பபு
.
சேலத்தில் அகில இந்திய அளவிலான 31,32-வது நாய்கள் கண்காட்சி : 45 வகையில் இந்தியா மற்றும் வெளிநாட்டு நாய்கள் என 400க்கும் அதிகமான அரிய வகை நாய்கள் பங்கேற்பு : இந்திய மற்றும் வெளிநாட்டு அரிய வகை நாய் இனங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து அதன் குணாதிசயங்களை கண்டறிந்தனர்.
சேலம் அக்மே கேணல் கிளப் சார்பில் அகில இந்திய அளவிலான நாய்கள் கண்காட்சி சேலம் நான்கு ரோடு அருகே உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல அரிய வகை நாய்கள் உட்பட, பூனே, கோலாபூர், மஹாராஸ்ட்ரா, கேரளா, சென்னை, பஞ்சாப், போபால் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நமது நாட்டில் வளர்க்கப்படும் நாய்களுடன் சேலம் மாநகர மற்றும் மாவட்ட காவல் பணியாற்றும் துப்பறியும் உயர் ஜாதி, அதாவது துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள ஐந்தறிவு கொண்ட ஜீவன்களும் கலந்து கொண்டன.
சேலம் ஆத்மி கேனல் கிளப் தலைவர் விசு காளியப்பா தலைமையில் நடைபெற்ற இந்த 2024 வது ஆண்டுக்கான 31 மற்றும் 32 ஆகிய தேசிய அளவிலான போட்டியினை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் மற்றும் சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த தேசிய அளவிலான கண்காட்சியை துவக்கி வைத்தார்.
குறிப்பாக இந்திய வகை நாய்களான ராஜப்பாளையம், சிப்பிப்பாறை, டேஸ்ஹவுன்ட், பீகில், ராட்வீலர், டால்மேசன், கிரேடன், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்ட், மற்றும் மிகவும் அரிய வகை நாய்களான ரோடிசியன் ரிட்ஜ்பேக் புல்டெரியா வகை நாய்கள் என 45 வகையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 400க்கும் அதிகமான நாய்கள் அரிய வகை நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு இந்தியாவில் பராமரிக்கப்படுபவர்களால் பங்கேற்றன.
குறிப்பாக சர்வதேச நாடுகளைச் சேர்ந்த நடுவர்களாக கலந்து கொண்ட இந்த கண்காட்சியில், இனத்திற்கு ஏற்ப அதன் வளர்ச்சி உடல்வாகு, நடை, ஓட்டம் மற்றும் அதன் தோற்றம் என அதன் குணாதிசியங்கள் பொருத்தமாக உள்ள நாய்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட நாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக அதன் உரிமையாளர்களும் பயிற்சியாளர்களும், நாய்களின் பெயரை சொல்லி கோசங்களை எழுப்பினர். இந்த நாய்களின் தனி திறன்களைbகண்காட்சியில் கண்காட்சியில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்.
இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில், சேலம் அக்மே கேணல் கிளப் செயலாளர் நடராஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: