அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் திருமாவளவனும்,
கிருஷ்ணசாமியும் இரட்டை வேடம். சேலத்தில் ஆதித்தமிழர் பேரவை அதியமான் பரபரப்பு குற்றச்சாட்டு.....
சென்னையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடுகேட்டு பாதுகாப்பு பேரணி. சேலத்தில் தமிழ்நாடு ஆதித்தமிழர் பேரவை மாநில தலைவர் அதியமான் அறிவிப்பு.
ஜனவரி ஆறாம் தேதி சென்னையில் தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் அருந்ததியர் உள் ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி நடைபெறும் என சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவையின் மாநில தலைவர் அதியமான் தெரிவித்தார்.
தமிழ்நாடு அருந்ததியர் அமைப்பு கடந்த மாதத்தில் துவங்கப்பட்டது 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் கூட்டமைப்பாக இணைந்துள்ளனர். ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பு முழு ஒதுக்கீடு சம்பந்தப்பட்டது.
உள் ஒதுக்கீடு குறித்து வந்த தீர்ப்பு சிறப்பான தீர்ப்பு மாநில அரசு உள்ளது குறித்து முடிவெடுக்கலாம் என அறிவித்திருந்தது பாராட்டுத்தக்கது. சரியான தரவுகளின் அடிப்படையில் உள்ள ஒதுக்கீடு வழங்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 18 சதவீத இட ஒதுக்கடை பிரித்து 76சாதிகளுக்கும் அவர்களின் பின்னணியான பின் தங்கிய உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எங்கள் கூட்டணியின் நோக்கம் என தெரிவித்தார். அதற்காக தமிழக அரசு ஒரு குழு அமைத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒன்றிய அரசிற்கு அதிக அதிகாரம் உள்ளது. அனைத்து கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிவித்துள்ளதால் இந்த அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் தான் ஒட்டுமொத்த பிரச்சனையும் சீராகும் எனவும் தெரிவித்தார். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார். ஆர்ப்பாட்டத்தில் அவர் இட ஒதுக்கீட்டை பிரிக்கக் கூடாது என பேசி உள்ளார். இட ஒதுக்கீட்டிற்கு ஒரு இடத்தில் ஆதரவு எனவும் சில மேடைகளில் எதிர்ப்பு எனவும் பேசி வருவது நல்லதல்ல. குறிப்பாக இட ஒதுக்கீடு குறித்து மறுசீராய்வு மனு அளித்தது நல்லதல்ல. குறிப்பாக இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வழக்கு போட்டிருப்பது அவரின் இரட்டை வேடத்தை காட்டுவதாக அதியமான் தெரிவித்தார்.
கிருஷ்ணசாமி அவர்களின் கூற்று தவறானது எனவும் தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் இட ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து எடுத்துக் கொடுக்கக் கூடாது என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்கள் முயற்சியின் காரணமாக அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை ஒழித்துக் கட்ட சிலர் முயற்சி செய்து வருகின்றனர் என தெரிவித்தார். 70 ஆண்டுகளாக அனுபவித்த சலுகைகளை கிருஷ்ணசாமி திருமாவளவன் இருவரும் தடுத்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணசாமி திருமாவளவன் இருவரும் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வாங்கி கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அருந்ததிய மக்கள் நன்றி செலுத்துவார்கள் எனவும் தமிழக முதல்வர் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களை பெறுவார் என அறிவித்துள்ளார் அந்த 200 இடங்களிலும் அருந்ததியர் மக்கள் தங்கள் பணியை ஆற்றுவார்கள் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறையை பெயர் மாற்றம் செய்து, சமூக நீதிக்கான துறை என மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் மேற்கு தொகுதியில் அதிகம் அருந்ததியர்கள் இருப்பதால் மாற்று சாதியினரை வேட்பாளராக நிறுத்தக்கூடாது.
உள் ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
ஒரே கூட்டணியில் இருந்தாலும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது எங்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்போம் என தெரிவித்தார். தமிழக அரசு இப்பிரச்சனையில் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவித்தார். விஜய் நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் வராதது குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தவர் திருமாவளவன் எப்பொழுதும் இரட்டை நிலையில்தான் இருப்பார் என கூறினார். நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் சேலம் மாவட்ட செயலாளர் ஏ டி ஆர் சந்திரன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.
0 coment rios: