வியாழன், 5 டிசம்பர், 2024

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் தீர்த்தக்குட ஊர்வலம்: 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் பவானி நகரின் காவல் தெய்வமாக விளங்கும் செல்லியாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா எட்டு கால யாக பூஜைகளுடன் ஆகம விதிப்படி வருகிற 8ம் தேதி வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி, தீர்த்தக் குட ஊர்வலம் இன்று (டிச.5) நடைபெற்றது. இதில், பவானி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு சென்றனர் .

அங்கு, புனித நீராடி மஞ்சள் உடை உடுத்தி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு நடன குதிரைகள் பம்பை மேள வாத்தியங்கள் மற்றும் காங்கேயம் பசு உள்ளிட்டவைகள் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கூடுதுறையில் இருந்து தொடங்கிய தீர்த்தக் குட ஊர்வலமானது பழனி ஆண்டவர் கோயில் வீதி, விஎன்சி கார்னர், மேட்டூர் - அந்தியூர் பிரிவு, தினசரி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய விதிகள் வழியாக ஊர்வலநம் கோயிலை அடைந்தது.

தொடர்ந்து, பக்தர்கள் எடுத்து வந்த புனித நீரை செல்லியாண்டியம்மன் உற்சவருக்கு பக்தர்கள் கைகளால் ஊற்றி அம்மனை தரிசித்து சென்றனர். இந்த தீர்த்த குட ஊர்வலம் காரணமாக பவானி போக்குவரத்து காவல்துறை சார்பில் பவானி நகரில் முழுவதுமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: