சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆன்லைன் வர்த்தகத்தில் 5 லட்சம் ரூபாய் மோசடி புகார் விவகாரம். முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு. முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்க தவறும் பட்சத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனர் மீது புகார் அளிக்கவும் முடிவு.
சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளை சேர்ந்து ஓய்வு பெற்று அரசுத்துறை அதிகாரிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் 5 லட்சம் ரூபாய் பண முதலீடு செய்து மோசடி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆன்லைன் வர்த்தகம் குறித்து அறிவுறுத்திய மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்த விவகாரம். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மனோகரன் மற்றும் கந்தசாமி, தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி மற்றும் பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் என கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை கூட்டம் சேலம் சின்ன திருப்பதி பகுதியில் நடைபெற்றது. பணம் முதலீடு செய்தது முதலீடு செய்த தொகையில் ஏற்கனவே அவர்கள் லாபம் பெற்றது,
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனம் முதலீடு செய்த பணத்தை திருப்பி கொடுக்காமல் முடங்கியது, இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தது என்பன உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அப்பொழுது ஆன்லைன் வர்த்தகம் குறித்து அறிவுறுத்திய மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் தங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனர் இடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் வரும் 30ம் தேதிக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் வர்த்தகம் என்பது நம்பகத்தன்மை அற்ற ஒரு வர்த்தகம் என்பதாலும் தாங்கள் கூறியதன் அடிப்படையில் தாங்கள் முதலீடு செய்ததற்கு உண்டான அனைத்து பணிகளையும் நாங்கள் இருவரும் செய்து கொடுத்துள்ளதாகவும் இதன் காரணமாக சில பலன்களை தாங்கள் பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் முடங்கிய பின்னர் ஆன்லைன் வர்த்தக நிறுவனர் மீது புகார் அளிக்காமல் தங்கள் மீது புகார் அளித்தது எந்த விதத்தில் நியாயம் என்று பலவாறு தங்களது தரப்பு நியாயங்களை கேள்விகளாக கேட்டுள்ளனர். இதனை அடுத்து பேசிய கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, தற்பொழுது நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலீடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் என ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்த பணம் அதன் உரிமையாளரால் வழங்கப்பட உள்ளதாக, அறிவுறுத்தியவர்கள் அறிவித்துள்ளதால் மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவை விசாரணை இல்லாமல் நிறுத்தி வைப்பது, குறிப்பிட்ட காலகடுவுக்குப் பிறகும் இதே நிலை நீடித்தால் ஆன்லைன் வர்த்தக உரிமையாளர் மீது புகார் அளிப்பது எனவும் முடிவு செய்வதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக அமேசர் வர்த்தக முதலீட்டில் பாதிக்கபட்ட ரவிகுமார், ராஜசேகரன், ஜெகதாம்பாள். சிவ பரகாஷ், ராஜ்குமார் ஆகியோரின். காவல் துறை புகார் குறித்து சம்பந்தபட்ட நபர்கள் மனோகரன் மற்றும் கந்தசாமி ஆகியோர் இணைந்து நடத்திய பேச்சு வார்த்தை மூலம் சமூக தேர்வு எட்டபட்டது.
0 coment rios: