சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிலிருந்து அவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தான கருத்தரங்கம்.
சேலம் கிராமிய பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் திருப்பூர் சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் ஆகியவை இணைந்து நடத்திய ஜவுளி தொழிலில் வளரினம் பெண்கள் மற்றும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கொடுமை சங்கங்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கருத்தரங்கனை இணைந்து நடத்திய அமைப்புகளை சார்ந்த திருமதி அலமேலு மற்றும் நம்பி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, மாதர் சங்க சேலம் மாவட்ட பொறுப்பாளர் பரமேஸ்வரி, செல்ல செல்வகுமார், வழக்கறிஞர் திவ்யா, எச் எம் எஸ் கணேசன், ஐ ஆர் டி எஸ் என் ஜி ஓ தலைவர் ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பணிக்கு செல்லும் பெண்களின் நிலை குறித்தும் அவர்களுக்கு ஏற்படும் அசவ் கரியங்கள், அதிலிருந்து அவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பன போன்ற ஜவுளி தொழிலில் வளரிலும் பெண்களுக்கு உண்டான பாதுகாப்பு குறித்து விரிவாக பட காட்சிகளுடன் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ஜவுளி தொழில் அன்றும் இன்றும் ஒரு பார்வை, ஜவுளி தொழிலில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சவால்கள் உரிமை மீறல்கள், தொழிலாளர் நலச் சட்டங்களின் தற்போதைய நிலை புதிய தொழிலாளர் குறியீடுகள் தொகுப்புகளின் தாக்கம் மற்றும் பெண் தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதில் கொடுமை சமூக அமைப்புகளின் பங்கு உத்திகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக அந்தந்த அமைப்பை சேர்ந்தவர்களால் விளக்கம் அழிக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கத்தில் பல்வேறு கொடுமைச் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் வளரிளம் பணிக்கு செல்லும் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: