சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா. ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மற்றும் சேலம் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் மனித உரிமைகள் தினம், பாரதியார் பிறந்த தினம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்றது.
மக்கள் உரிமைகள் கழகத்தின் மாநில இளைஞரணி நிர்வாகச் செயலாளர் ஆர்வி பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார். விழாவில் சேலம் கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோக், தொழிலதிபர் ஓ.டெக்ஸ் இளங்கோவன் மற்றும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையில் தலைவர் டாக்டர் நாகா அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: