சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
60 கோட்டங்களில் சிறந்த சேவை மற்றும் மக்கள் பணியாற்றி வரும் 44வது கோட்ட மாமன்ற உறுப்பினர் இமயவரம்பனுக்கு பாராட்டு விழா.. 44வது கோட்ட தேசிய புனரமைப்பு காலனி குடியிருப்பு தூய்மை பணியாளர் நல்வாழ்வு சங்கத்தினர் ஏற்பாடு.
60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியின் 44 வது வார்டு கிச்சிப்பாளையம் தேசியப் புணர் அமைப்பு காலனி பகுதியில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் பொது மக்களின் நலனுக்காக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியும் சொல்லாத வாக்குறுதியையும் பொது மக்களின் நன்மை பயக்கும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் விதமாக, 44வது கோட்ட விசிக மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ஜெ.மு. இமயவரம்பனுக்கு பாராட்டு விழா சேலம் கிச்சிப்பாளையம் தேசியப் புணரமைப்பு காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.
தேசியப் புனரமைப்பு காலனி குடியிருப்பு தூய்மை பணியாளர்கள் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கிச்சிபாளையம் பகுதி திமுக செயலாளர் ஜெய், 44 வது வார்டு திமுக செயலாளர் செந்தில், சேலம் மாநகர தொண்டரணி அமைப்பாளர் திமுகவைச் சேர்ந்த திருமதி தேவி பாலன், முன்னாள் ஊர் நாட்டாமை சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த வகித்தனர்.
கடந்த அறுபது ஆண்டுகளில் எத்தனையோ மாமன்ற உறுப்பினர்கள் வந்து சென்று இருந்தாலும் கூட தான் பதவியேற்ற நாளிலிருந்து 44 வது வார்டு மக்களின் நலனுக்காகவே தற்பொழுது வரை பாடுபட்டு பல்வேறு நல்ல பல திட்டங்களை செய்து வரும் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இமயவரம்பன் சிறப்பு விருந்தினராக தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாமன்ற உறுப்பினரின் சிறந்த சேவையை பாராட்டும் விதமாக நினைவு பரிசு வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட 44 வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை ஏற்று, விழாவின் சிறப்பு விருந்தினர் மாமன்ற உறுப்பினர் இமயவரம்பன் பேசுகையில், தான் பதவியேற்ற நாளிலிருந்து தேர்தல் வாக்குறுதியின் போது கூறிய வாக்குறுதிகள் மட்டுமல்லாது சொல்லாத வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்துள்ளது தனக்கு பெருமை அளிப்பதாகவும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த இந்த வார்டு மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த பகுதியில் உள்ள ஊர் கிணறு கடந்த 50 ஆண்டுகளாக தூர் வாராமல் பராமரிப்பற்று கிடந்த நல்ல தண்ணீர் கிணற்றை தூய்மை பயன்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது, 60 ஆண்டுகளாக ஊர் மக்களுக்கு கிடைக்க பெறாமல் இருந்த பட்டாவிற்கு உரிய அலார்ட்மெண்ட் ஆர்டரை பெற்று தந்தது குறுகிய காலத்தில் பட்டா மற்றும் பத்திரம் பெற்று தர கூட்டு முயற்சி செய்து வருவது, பெண்களுக்கு தனி கழிப்பிட வசதி பெற்று தந்தது, சுமார் 500 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் பொது குடிநீர் வசதி, சொத்து வரி செலுத்துவதற்கு உண்டான ஆர்டர் பெற்று தந்தது, சாலை வசதி மின்விளக்கு சாக்கடை வசதி மேம்படுத்தியது, சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் வளர்ச்சிக்காக மாமன்றத்தில் அவ்வப்போது குரல் கொடுத்து பேசி வருவது என்பன உள்ளிட்டவைகள் குறித்து பட்டியலிட்டார் இமயவரம்பன்.
தொடர்ந்து பேசுகையில் தற்போது இந்த விழாவில் தன் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் மூன்று மாதத்திற்கு உள்ளாக செய்து தருவதாகவும் உறுதியளித்தார். இதனை அடுத்து 50 ஏழை எளியவர்களுக்கு இலவச சேலை மற்றும் புத்தாண்டுக்கான நாட்காட்டிகளை வழங்கி இமயவரம்பன் வாழ்த்து தெரிவித்தார்.
இனிதே நிறைவு பெற்ற விழாவை தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தேசிய புனரமைப்பு காலனி குடியிருப்பு தூய்மை பணியாளர்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கறி விருந்து வழங்கப்பட்டது.
விழாவில் தூய்மை பணியாளர் நல்வாழ்வு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சேகர் மகாலிங்கம் பழனி யுவராஜ் நாகராஜ் முருகன் ராஜா மாது உட்பட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: