ஈரோடு மரப்பாலத்தில், ஈரோடு மாவட்ட முஸ்லிம் அசோசியேசன் மீலாதுன் நபி விழா மற்றும் அல்லா வடிவமைத்த அழகிய சமூகம் நூல் வெளியீட்டு விழா முஸ்லிம் அசோசியேஷன் தலைவர் ஏ.அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் சிந்தனை பேரவை த.ஸ்டாலின் குணசேகரன், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நிறுவனர்
சி.எம்.என்.சலீம், அல்லா வடிவமைத்த அழகிய சமூகம் என்ற நூலை எழுதிய திரைப்பட இயக்குனர் பழ.கருப்பையா உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த விழா கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பழ.கருப்பையா பேசுகையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து, தன்னிறைவு தற்சார்பு சமூகமான இஸ்லாமிய சமூகத்தில் உள்ள நீங்கள் தமிழகத்தில் 80 லட்சம் பேர் வாக்காளர்களாக உள்ளீர்கள்.
இந்த 80 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்களும் வருகின்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என வீட்டில் இருந்து கொண்டு தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இருக்கின்ற 30 கோடி இஸ்லாமியர்களும் உங்கள் போராட்டத்தை முன்னெடுப்பார்கள்.
ஆகவே மத்திய அரசு கொண்டு வருகின்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்ப்பதற்கு முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 80 லட்சம் இஸ்லாமியர்கள் வருகின்ற தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும், அதேபோல் மாவட்ட தலைநகரங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 80 லட்சம் இஸ்லாமியர்களும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும், அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பேன் என பழ.கருப்பையா பேசினார்.
0 coment rios: