சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக தொழில் துறை அமைச்சரிடம், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கோரிக்கை கடிதம்.
அந்த கடிதத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரிலே சேலம் மேற்கு தொகுதியில் ஜவுளி தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் அதற்கான இடம் சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மாமாங்கம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நிலம் கையில படுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான பணிகள் சிறு அளவில் கூட துவங்கப்படவில்லை. இதனால் இந்த ஜவுளிர் தொழில் பூங்காவை எதிர்நோக்கி காத்திருக்கும் ஜவுளி தொழில் செய்பவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். ஆகவே பணிகளை முழுமையாக விரைந்து செய்து முடித்து சேலம் மாவட்டத்தில் சாயப்பட்டறை கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து காத்திட கேட்டுக்கொள்கிறேன். மேலும் சேலம் நியோ டைட்டில் பார்க் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தாலும், இன்னும் நிறைய நிறுவனங்கள் தொழில் துவங்கவில்லை. இதனால் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விரைவில் அனைத்து நிறுவனங்களும் தொழில் துவங்க அறிவுறுத்தப்பட கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட இரண்டு நிறுவனங்களிலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த தகுதியான இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்பதாக அந்த கடிதத்தில் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 coment rios: