S.K. சுரேஷ்பாபு.
இந்திய திருநாட்டின் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்து, சேலம் வீரபாண்டி திமுக ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் குறித்து மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நேற்று அவதூறாக பேசிய தகவல் தமிழக முட்பட நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த நிலையில், சேலம் கிழக்கு மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் ஆட்டையாம்பட்டி இளம்பிள்ளை பேரூர் கழகங்களின் சார்பில் ஒன்றிய அமைச்சர் அமிக்ஷாவை கண்டித்து ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் வீரபாண்டி ஒன்றிய கழகச் செயலாளர் திருமதி. வெண்ணிலா சேகர் தலைமையிலும் ஆட்டையாம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் முருக பிரகாஷ் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு தெரியாமல் அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக நடத்திய பல்வேறு போராட்டங்கள் குறித்து தெரியாமல் அவர் மீது அவதூறு தகவல்களை பரப்பிய மத்திய அமைச்சர் அமித் ஷவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் அவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதில் பல்வேறு கோரிக்கைகளை வளைத்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் கோமதி முருகபிரகாஷ் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பிரண்ட்ஸ் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், சதீஷ்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வேங்கையன் ஒன்றிய நிர்வாகிகள் அருள், செந்தில்குமார், சாஸ்தா, தங்கராசு, மகேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பார்வதி ஸ்ரீராம், அருள், கோகிலா சங்கர், ராஜலட்சுமி சித்தேஸ்வரன், சின்னபொண்ணு மெய்வேல், அழகேசன் ஒன்றிய கவுன்சிலர் நித்தியா மோகனவேல் பேரூர் அவைத்தலைவர் தாமரைச்செல்வன், இன்ஜினியர் வெங்கடாசலம் S.K.பொன்னுசாமி, வீரபாண்டி வெங்கடாசலம், ஆசிரியர் வெங்கடாசலம், இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
0 coment rios: