சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட மைய ஏழாம் ஆண்டு மாவட்ட மாநாடு சேலத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட ஏழாம் ஆண்டு மாநாடு சேலத்தில் நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில துணை தலைவர் திருவேரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜு மாவட்ட மகளிர் துணை குழு ஒருங்கிணைப்பாளர் காயத்ரி ஒலித்து ஒரு முன்னிலை வகித்த இந்த மாநாட்டினை சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிருந்தா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். சங்கத்தின் மாநில துணை தலைவர் சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் அர்த்தநாரி வாழ்த்துரை வழங்கிய இந்த மாநாட்டில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாக முன்மொழிக்கப்பட்டன. தொடர்ந்து சங்கத்தின் மாநிலத் தலைவர் திருவேரங்கன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து உரை ஆற்றினார்.
இந்த மாநாடு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நெடுங்காலமாக கேட்பாராற்று உள்ளன என்றும் இதனை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர் வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராமநாதபுரத்தில் மாநில மாநாடு, நடத்த உள்ளதாகவும், உள்ளாட்சி அமைப்புகளை நகரமயமாக்குதலில் முனைப்பு காட்டி வருவதாகவும், இதன் காரணமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் தங்களது அடுத்த கட்ட போராட்டம் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இந்த மாவட்ட மாநாட்டில் மாவட்ட நிர்வாகிகள் மாநில நிர்வாகிகள் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தில் ஏழாவது மாவட்டம் மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பேரணியும் சேலம் மாநகரின் மையப் பகுதிகளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: