சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கல்வித்துறையில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ....
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 1.26 லட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் பயின்று வருகிறார்கள் இந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் கல்விக்கூறில் 1600 சிறப்பு பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். பள்ளிகளில் கல்வி பயிற்சி அளித்தல் இல்லம் சார் பயிற்சி அளித்தல் பிறப்பு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல் பேச்சு பயிற்சி பெண் கல்வி ஊக்கத்தொகை போக்குவரத்து பயணப்படி மற்றும் தொழில் பயிற்சிகளுக்கு வழிகாட்டல் ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் செவிலியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி ஆலோசனை மற்றும் வழிகாட்டல் செய்தல் உள்ளிட்ட அரசின் திட்டங்களை செய்து வரும் சிறப்பு பயிற்றுநர்கள் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் தமிழக அரசு இவர்களின் பணியை அங்கீகரித்து பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்டலம் வாரியாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
0 coment rios: