S.K. சுரேஷ்பாபு.
திருமணிமுத்தாற்று பாசன விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ் சேலம் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் அப்புசாமி அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு.
திருமணிமுத்தாற்று பாசன விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ் சேலம் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் அப்புசாமி அவர்களை அலுவலகத்தில் நேரில் சந்தித்து விவசாயிகள் சார்பில் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனு நகலை அவர்களிடம் வழங்கி, ஜாரி கொண்டலாம்பட்டி ராஜவாய்க்கால் கரையை உடைந்ததை பாதிக்கப்பட்ட பகுதியை கான்கிரீட் சுவர் அமைத்து தர வேண்டி கோரிக்கை வைத்தோம். உடனடியாக நாளை எம்.சென்ட் மூட்டை அமைத்து விளைநிலங்களுக்கு வருகிற தண்ணீரை தடுக்கிறோம் என்றும் பிறகு மழை நின்ற பிறகு காங்கிரீட் சுவர் அமைத்து தருகிறோம் என உறுதி அளித்தார். விவசாயிகள் சார்பில் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவித்து கொண்டோம். உடன் நீர்வளத்துறை AE தேன்மொழி அவர்கள், ஜாரி கொண்டலாம்பட்டி துணைதலைர் கந்தையன், இணைச்செயலாளர் கருணாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 coment rios: