இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் பிறை கொடி ஏற்று விழா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ.அஸ்கர் அலி தலைமையில் மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜி.முஹம்மது தாஜ் முஹைதீன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது ஆரிப் எடுத்துரைத்தார், மாவட்ட துணைத் தலைவர்கள் ஹாஜி சான் பாஷா, அலாவுதீன் சேட் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது கான், அசன்கான் மாவட்ட பொருளாளர் இ.கே.எம்.முஹம்மது கலில், விவசாய அணி, மாவட்ட செயலாளர் பெருந்துறை சான் பாஷா, எஸ்.டி.யூ மாவட்ட செயலாளர் சேக் தாவூத், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சத்தியமங்கலம் முஸ்தாக் அகமது, சத்தியமங்கலம் நகரத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினார்.
கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட மீலாதுன் நபி விழா மற்றும் சமூக நல்லிணக்க விருது வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு உழைத்த இயக்கத் தோழர்களுக்கும் மேலும் அதற்கு பொருளாதார உதவி செய்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட தலைமை அலுவலகம் மற்றும் காயிதே மில்லத் சேவை மையம் திறப்பு விழா எதிர்வரும் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் ஏற்பாடு செய்வது எனவும்,அது சமயம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நிர்வாகிகளை அழைத்து வக்ஃபு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றை நடத்துவது.
இந்நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவரும்,ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும்,தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே.நவாஸ் கனி எம்.பி அழைப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது, மாவட்ட அளவில் இயக்கத்தை பலப்படுத்தக்கூடிய நோக்கத்தில் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 11 நபர்கள் கொண்ட அமைப்புக்குழுவை நியமிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு 13 மாதங்கள் ஆன நிலையில், இதுவரை நடைபெற்ற இயக்க கூட்டங்களிலும், கட்சியின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத மாவட்ட நிர்வாகிகளிடம் முறையான விளக்கம் கேட்டு இயக்கத்தின் எதிர்கால நலன் கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்
இந்திய விடுதலைப் போரின் முன்னோடி பார்போற்றும் சமூக நல்லிணக்க நாயகர் மாவீரர் திப்பு சுல்தானுக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இக்கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை எடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 coment rios: