புதன், 4 டிசம்பர், 2024

உடைந்த கரையை கான்கிரீட் தடுப்பு சுவர் ரயில் ரோடு வரை அமைத்துக் கொடுத்து விவசாயிகளுக்கு உத விட வேண்டும். ஆற்றுப் பாசன விவசாயிகள் சார்பில் திருமணி முத்தாறு பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ் மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

உடைந்த கரையை கான்கிரீட் தடுப்பு சுவர் ரயில் ரோடு வரை அமைத்துக் கொடுத்து விவசாயிகளுக்கு உத விட வேண்டும். ஆற்றுப் பாசன விவசாயிகள் சார்பில் திருமணி முத்தாறு  பாசன விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் கொண்டலாம்பட்டி தங்கராஜ் மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம். 

சேலம் ஏற்காட்டில் 50 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத மழை பெய்ததால் திருமணி முத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கந்தம்பட்டி பைபாஸ் ஆற்றுபாலம் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் பாலத்தின் மேல்  சென்றதால் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நேற்று முழுவதும் பாதிக்கப்பட்டது.  பாலத்தில் உள்ள அடைப்புகளை அகற்றி திருமணி முத்தாட்டில் மழைக்காலங்களில் வரும் மழைநீர்  காவிரியில் கலக்கும் நெஞ்சடையார் வரையிலும் தூர்வாரி ஆற்றில் இரு கரையிலும் உள்ள ஆக்கிரமங்கள் அகற்றி நடவடிக்கை வேண்டும் எனவும், புத்தூர் வயக்காடு திருமணிமுத்தாறு  ராஜவாய்க்கால் பாசனம் பகுதி நேற்று ஆற்றில் அதிக நீர் வந்ததால்கரைகள் எல்லாம் சேதம் அடைந்து மழை நீர் சுமார் 150 மேல் உள்ள விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.  உடைந்த கரையை சரி செய்து ராஜவாய்க்காலை  தூர்வாரி கரையை சீரமைக்க வேண்டியும், ஜாரி கொண்டலாம்பட்டி ராஜவாய்க்கால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதியை எம்சன் மூட்டை அடுக்கி கரையை நீர்வளத்துறை சார்பில் சரி செய்யப்பட்டது.   மீண்டும் நேற்று மழையில் அதே இடத்தில் பாதிப்பு ஏற்பட்டு மணல் முட்டைகள் சரிந்து சுமார் 60 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டது உடைந்த கரையை கான்கிரீட் தடுப்பு சுவர் ரயில் ரோடு வரை அமைத்துக் கொடுத்து விவசாயிகளுக்கு உத விட வேண்டி ஆற்றுப் பாசன விவசாயிகள் சார்பில் திருமணி முத்தாறு  பாசன விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்பு தலைவர் கொண்டலாம்பட்டி எம் தங்கராஜ் அவர்கள் மாண்பு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை அனுப்பி  வைத்துள்ளார்.