சேலம்.
உடல் சிதறி வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு அரசு வழங்கிய நிலத்தை அரசே அபகரிக்கும் அவலம் சேலம் அருகே நடந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தன் இவர் ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றி கடந்த 1965 ல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போரில் உடல் சிதறி வீர மரணம் அடைந்தார். இதற்காக கருணை அடிப்படையில் ராணுவ வீரர் சித்தனின் குடும்பத்திற்கு கடந்த 25 9 1969ல் அப்போதைய மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 4 10 1969ல் ஓமலூர் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சாமி நாயக்கன்பட்டி கிராமத்தில் தோப்பு புறம்போக்கு நிலம் இரண்டு ஏக்கர் 92 சென்ட் நிலத்தை தங்காள் என்பவர் பெயரில் நில ஒப்படை செய்து சுவாதீனம் கொடுக்கப்பட்டது.
அரசு வழங்கிய நாளிலிருந்து சுமார் 53 ஆண்டுகள் அனுபவம் செய்து வந்த இந்த நிலத்திற்கு பட்டா கேட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் 53 ஆண்டுகள் நேரடியாகவும் பதிவு தபால் மூலமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வரை பட்டா வழங்கவில்லை இந்த நிலத்திற்கு 30 ஆண்டுகள் நிலவரி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்காக போராடிய தங்கவேலு அவரது மனைவி தங்காள் ஆகியோர் மறைந்து விட்ட நிலையில், வாரிசு என்ற அடிப்படையில் வசந்தகுமார் என்பவர் அரசு பட்டா கேட்டு போராடி வருகிறார். அரசு ஆவணங்கள் அனைத்தும் உள்ள நிலையில் கடந்த 16 12 2001 அன்று வட்டாட்சியர் அவர்கள் ராணுவ வீரரின் குடும்பம் வாழ்வதற்கு அரசால் வழங்கப்பட்ட நிலத்தை 53 ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசுக்கு வேண்டுமென்று நிலத்தை கையகப்படுத்துவது மிகுந்த மேதத்தினையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட வசந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தார் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து வசந்தகுமார் நம்மிடையே கூறுகையில் கடந்த 19 12 2002 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கை வலியுறுத்தி மண்டியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து மனு கொடுத்தோம் என்றும் இது சம்பந்தமாக இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு அதிகாரியும் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை மீண்டும் எங்கள் நிலத்தை அரசு காவல் நிலையம் அமைப்பதற்கான முயற்சி செய்து வருகிறது இதை தடுக்க சென்றால் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடுகள் என்று கூறுவதாகவும் எத்தனை முறை எத்தனை மனு எத்தனை ஆட்சி இடம் மனு கொடுத்தாலும் தங்களுக்கு எந்த பலனும் இல்லை இனி இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எங்கள் குடும்பத்தினருடன் அகிம்சை முறையில் தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து எங்களின் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
மேலும் தமிழக முதலமைச்சர் அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் நாங்கள் குடும்பத்தோடு வேண்டிக் கொள்வது நாங்கள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அல்ல ராணுவ வீரரின் உயிர் தியாகத்திற்கு அரசும் அரசு அதிகாரிகளும் எங்கள் குடும்பம் வாழ கொடுக்கப்பட்ட நிலத்திற்கான பட்டாவை கேட்டு வருவதாகவும் கருணை உள்ளம் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாமல் பட்டா வழங்க ஆணையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
0 coment rios: