நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக இன்று (டிச.14) அதிகாலையில் இருந்தே தகவல்கள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலை 10.12 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பு உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு குறித்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர் 2024) காலமானார் என்று தற்போது மருத்துவமனை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: