சேலம்.
சேலம் குறிஞ்சி மருத்துவமனையில் தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மையம் துவக்க விழா.
சேலம் மாணவர்கள் கடந்த 20 ஆண்டுகால பயணத்தில் சிறப்பான சுகாதார சேவைகளை வழங்கி வரும் சேலம் குறிஞ்சி மருத்துவமனையில் மற்றொரு மயில் கல்லான நம்மை காக்கும் 48 எனும் தமிழக அரசின் என்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சேலம் மாவட்டத்திலேயே முதல் முறையாக தமிழக அரசால் சிகிச்சை மையத்தை துவங்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால சிகிச்சை மையம் முக்கியமாக சாலை விபத்து நடந்த முதல் 48 மணி நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் விரிவான கவனிப்பை வழங்குவதற்காக துவங்கப்பட்டுள்ள இந்த அவசர பிரிவு துவக்க விழாவிற்கு மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிமாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மான வழக்கறிஞர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த இலவச அவசர சிகிச்சை மையத்தினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணித்தார்.
இந்த சிகிச்சை மையம் குறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மணிமாறன் நம்மிடையே கூறுகையில், இந்த இலவச சிறப்பு மையத்தின் மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி அவசியம் சிறந்த உயர்தர சிகிச்சையை உறுதி செய்வதையும் மேலும் உயிர்களை காப்பாற்றுவதையும் நோக்கமாக கொண்டவை என்றும், மேலும் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசர சிகிச்சை திறன்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அவசர சிகிச்சை மையத்தில் இலவசமாக முதல் கட்ட சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அல்லது தங்களது மருத்துவமனையிலோ மேல் சிகிச்சையை தொடரலாம் என்றும் இதற்கு அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறந்த சலுகையில் சிகிச்சை என்றும் தெரிவித்தார்.
இந்த துவக்க விழாவில் மாணவரின் முக்கிய பிரமுகர்கள் மருத்துவர்கள் மருத்துவமனை நிர்வாகிகள் என திரளானூர் கலந்து கொண்டனர்.
0 coment rios: