சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
உலக இசை தின விழா. கலை பண்பாட்டு துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு இசைப்பள்ளி மாணவஉட்பட இசை வித்வான்கள் அசத்தல்.
இசையால் மயங்காதோர் இதயம் உண்டோ என்பது முதுமொழி.
அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் டிசம்பர் 16ல் உலக இசை தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட கலை பண்பாட்டு துறை மற்றும் சேலம் அரசு இசைப்பள்ளி சார்பில் உலக இசை தின விழா சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோவில் அருகே நடைபெற்றது.
சேலம் மாவட்ட கலை பண்பாட்டு துறையின் உதவி இயக்குனர் நீலமேகன் மற்றும் சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த இசை விழாவில், சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இராசி. சரவணன் மற்றும் பொருளாளர் குமரவேலு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர். கலை வளர்மணி கோவிந்தராஜ் குழுவினரின்
கிராமிய கலை தப்பாட்ட நிகழ்ச்சியுடன் தொடங்கிய உலக இசை தின விழாவில் தொடர்ச்சியாக காண இசைக் குயில் தனசொருபி. கருப்பண்ணன் அவர்களின் தேவார இசை, வடுவூர் முனைவர் தினேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்ற கருத்தரங்கம் உட்பட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் விழாவில் கலந்து கொண்ட அனைவரின் இசை தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் முனைவர் தினேஷ் குமார் விளக்கம் அளித்தார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் இசைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொருளாளர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
இராசி. சரவணன் நிகழ்ச்சியில் பேசும் போது இசையின் சிறப்பு அம்சங்கள் குறித்து பட்டியலிட்ட அவர் இசைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் காலத்தில் நல்ல முன்னேற்றமடைந்து அரசு துறையில் அதிகாரிகளாக பணியாற்ற வேண்டும் என்ற தனது கோரிக்கை இணையும் முன் வைத்தார்.
தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு புல்லாங்குழல் இசை மற்றும் வீணை இசை ஆகியவையும் நடைபெற்று நான்கு மணிக்கு விழா இனிதே நிறைவு பெற்றது.
இந்த உலக இசை தின விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கலை பண்பாட்டு துறை அதிகாரிகள், சேலம் மாவட்ட அரசு இசை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் இசை ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: