சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
இந்திய நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை அவதூறாக பேசி இழிவு படுத்திய விவகாரம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தினர் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.
இந்திய திருநாட்டின் சட்ட மாமேதை, புரட்சியாளர், பாபா சாஹிப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் அவதூறாக பேசி இழிவு படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு சற்றும் ஓய்ந்த பாடில்லை என்றே கூறலாம். மத்திய உள்துறை அமைச்சர் அமீத்சாவை பல்வேறு கோணங்களிலும் இழிவு படுத்தியும் அவமானப்படுத்தியும் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாள்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணமே உள்ளன. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய கோரி தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் சார்பில் பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் சேலத்தில் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார்.
ஆதித்தமிழர் பேரவை மத்திய மாவட்ட செயலாளர் ஏ டி ஆர் சந்திரன், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, தமிழ் தேச மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் மாரியப்பன் மற்றும் தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் அருண் சோரி கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்ட மாமேதையை நாடாளுமன்றத்தில் இழிவு படுத்திய அமித் ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரியும், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அமித்ஷாவிற்கு துணை போகும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். மத்திய பாஜக அரசு அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யும் வரை தங்களை போன்று நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறும் என்றும் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பை கொஞ்சம் கூட செவிசாய்க்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்ற திமிரையே காட்டுகிறது என்று ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் அருண் சோரி குற்றம் சாட்டினார்.
பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கண்டன நிர்வாகிகள் ஆனந்தி காவேரி விஸ்வநாதன் இம்தியாஸ்கான் வின்சென்ட் ஷேக் முகமது ராவண பிரபு ராஜேஸ்வரி மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: