ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனை சாலையில் அரசுமை வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் கவிராஜ் என்பவர் பணம் எடுக்க முயன்றுள்ளார். பின்னர், பணம் வரவில்லை என்று நினைத்து சென்றுள்ளார்.
இதனையடுத்து, சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி கரட்டான்காட்டுப்புதூரைச் சேர்ந் தவர் ஈஸ்வரி (வயது 39) என்பவர் அந்த ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியே வந்த நிலையில் ரூ.39 ஆயிரத்து 500 ரூபாய் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், அந்த பணத்தை சிவகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து, போலீசார் ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி, கவிராஜை வரவழைத்து பணத்தை ஒப்படைத்தனர். மேலும், பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஈஸ்வரியை போலீசார் வாழ்த்தி பாராட்டினர்.
0 coment rios: