சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வணிகர்களின் மீது வரிச் சுமைகளை உயர்த்தி வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் மத்திய, மாநில மற்றும் சேலம் மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் சேலம் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் தமிழகம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தின் சார்பில் சேலம் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. சேலம் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் கே பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் வர்கீஸ் இளையபெருமாள் சந்திரதாசன் செல்வகுமார் திருமுருகன் தங்கவேல் ராஜேந்திரன் பொன்னுசாமி சுந்தர்ராஜ் அருண் பெனின் ஜாக்சன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் கடைகளில் வாடகை மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும், சேலம் மாநகராட்சி வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி பழமடங்கு உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் மற்றும் மாநில அரசு கொண்டுவந்துள்ள ஆண்டுதோறும் ஆறு சதவிகிதம் கூடுதல் சொத்து வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் வணிக நிறுவனங்களுக்கு குப்பை வரி வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட ஆரம்ஸ கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ் கே பெரியசாமி செய்தியாளர்களிடம் ஒரு கையில் இது தங்களுடைய முதற்கட்ட போராட்டம் என்றும் இனிவரும் காலங்களிலும் தங்களது போராட்டம் தொடரும் என்று கூறிய அவர் அடுத்த கட்டமாக தங்களது கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் அதோடு மட்டுமல்லாமல் சேலம் மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்காத பட்சத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிக்கும் போராட்டத்தினை சேலம் மாவட்டம் முன்னின்று நடத்தும் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓமலூர் நகர மளிகை வியாபாரிகள் மற்றும் செருப்பு வியாபாரிகள் சங்க துணை செயலாளர் ஷாஜகான் உட்பட சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வர்த்தக வணிக தொழிற்சங்க நிர்வாகிகள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
0 coment rios: