சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தனது நிலத்திற்கு செல்லும் வழி தரத்துறை ஆக்கிரமித்து தமிழ்நாடு மின்வாரியத் துறையினரால் அமைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்பார்மறை அகற்ற வேண்டி, சேலம் கிழக்கு மாவட்ட பாஜக SC பூபதி உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் கிழக்கு மாவட்ட பாஜக எஸ்சி அணி தலைவர் பூபதி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் மாசிநாயக்கன்பட்டி அருகே உள்ள காட்டுவளவு பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் தமிழக மின்வாரியத்துறை தனது அனுமதியின்றி எனது வழித்தடத்தை அத்துமீறி ஆக்கிரமித்து டிரான்ஸ்பார்மரை அமைத்துள்ளது. இது ஒரு புறம் இருக்க அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் எங்களது நலத்திற்கு செல்லும் வழித்தடத்தில் அரசு அனுமதி இல்லாமல் தேங்காய் ஓட்டினை எரித்து அதனை பவுடர் தயார் செய்யும் நிறுவனம், பிளாஸ்டிக்கை எரித்து பை தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதனை கண்டித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பாஜக நிர்வாகி தனது ஆதரவாளர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வெறும் பரபரப்பை ஏற்படுத்தி இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தனது புகார் குறிப்பு கடந்த செப்டம்பர் 30 மற்றும் கடந்த அக்டோபர் 11 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் மட்டும் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் தன்னை அலை கழித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் தனது விவசாய நிலத்திற்கு செல்ல முடியாமல் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருந்து வரும் தனக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எனது மனுவனை கருணையுடன் பரிசீலனை செய்து அரசு அனுமதி இல்லாமல் எனது வழித்தடத்தில் கம்பெனி வைத்து நடத்தி வரும் சீனிவாசன் அவர்களின் கம்பெனியையும் அகற்றும் படியும் அல்லது மேற்படி தனது வலைத்தளத்தில் அமைத்துள்ள டிரான்ஸ்பார்மர் அகற்றி வேறு இடத்தில் அமைத்துக் கொள்ளும் படியும் எனது நிலத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மறை அகற்றியும் எனது நிலத்திற்கு நான் சென்றுவரும் வழித்தடத்தினை மீட்டு கொடுத்து உதவும்படியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
இதை எடுத்து காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் சமூக முடிவு எட்டப்பட்டதன் அடிப்படையில் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக எஸ்சி பிரிவு தலைவர் பூபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் சிறுது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
0 coment rios: