சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
.
கேப்டன் முதலாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு பழைய பேருந்து நிலையம் பகுதியில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி. 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி குருபூஜை நிகழ்ச்சி தமிழக முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேமுதிக பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குருபூஜை மற்றும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இன்று கிச்சிப்பாளையம் பகுதி செயலாளர் எம் பி விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேப்டனின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர் கூறும் போது பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி குருபூஜை சேலம் மாநகர் மாவட்டம் சார்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது மாநகரில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேப்டன் குருபூஜை முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 10 இடங்களில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் கேப்டனின் குருபூஜை நாள் அனுஷ்டிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி அன்னதானம் வழங்கப்படும் என தெரிவித்தார் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அவைத்தலைவர் செல்வகுமார் துணைச் செயலாளர் சீனிவாசன் மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் நாராயணன் சீனிவாசன் ஆரோக்கியசாமி கேப்டன் மன்ற செயலாளர் பன்னீர்செல்வம் மாவட்ட மகளிர் அணி ஜெயலட்சுமி பகுதி செயலாளர்கள் அம்மாபேட்டை செல்வம் கொண்டலாம்பட்டி செந்தில் குகை சேகர் செவ்வாய்பேட்டை தக்காளி ஆறுமுகம் கிச்சிபாளையம் பகுதி சபரி முஸ்தபா ஆசைத்தம்பி பிரதிநிதி காசி சத்தியமூர்த்தி கதிர்வேல் வார்டு செயலாளர்கள் 32 பிஸ்வா 40 முனியப்பன் 43 மனோகரன் 44 கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: