சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள். தங்கக் கவசத்தில் அருள் பாலித்த கோட்டை மாரியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை கொண்டாடும் விதமாக இன்று சேலம் மாநகரில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, காலை முதலே பல்வேறு மங்கல பொருட்களைக் கொண்டு நவகிரக நாயகி என்றும் சேலத்தில் உள்ள 18 பட்டிகளுக்கும் அரசு என போற்றப்படும் மாரியம்மனுக்கு புத்தாண்டை ஒட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு, தங்க கவசம் சாத்தப்பட்டது.
தொடர்ந்து மகாதீப ஆராதனைகள் காட்டப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இந்த புத்தாண்டு முதல் தங்களது வாழ்வு சிறக்க வேண்டும் என வேண்டி நவகிரக நாயகியான மாரியம்மனை வழிபட்டு சென்றனர். இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: