இதைத்தொடர்ந்து, செப்டம்பர் மாதம் 1ம் தேதி ஈரோட்டில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து, இவரும், சிறுவனும் ஈரோட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் 17 வயது சிறுவனை, இவர் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் நடத்திய விசாரணையின்போது உண்மை நிலை தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் உரிய விசாரணை நடத்தி, வைஷ்ணவி மீது, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: