சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் மருத்துவர்களின் அலட்சியத்தால் பட்டியலின பெண் பரிதாபமாக உயிரிழப்பு.
தமிழக அரசின் மருத்துவக் குழுமம் மற்றும் மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்னை குறித்து விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு கோரிக்கை.
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தாசநாயகன் பட்டி காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மேனகா. இந்த தம்பதியினருக்கு மகள்கள் மற்றும் மகன்கள் உள்ள நிலையில் மேனகா சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு மற்றும் மூச்சு திணறல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 16ஆம் தேதி மேனகாவிற்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தின் காரணமாக சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள மணிமா என்ற தனியார் மருத்துவமனையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். மோசமான சிகிச்சைகள், மருத்துவர்களின் வருகை இன்மை மற்றும் பிற காரணிகளால், மேனகா மறுநாள் 17 ம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு மருத்துவமனையில் உயிரிழந்தார். வேறு வழி தெரியாமல் சாதாரண காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட மேனகாவின் உடலை, கணவர் மற்றும் அவரது உறவினர்கள் வாங்கி சென்று விட்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கணவர் நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தார் தனது மனைவியின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு முதன்மை ஒருங்கிணைப்பாளரும், மத்திய மாநில - பொதுத்துறை எஸ்சி எஸ்டி பிரிவு ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சரஸ்ராம் ரவியை அனுப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரித்த அவர், சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் தமிழ்நாடு மருத்துவ வாரியத்திற்கும் கோரிக்கை மனுவினை அனுப்ப அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரஸ்ராம் ரவி,
இந்த விஷயம் சம்பந்தமாக டாக்டர் தீபக் என்பவரின் கவனத்திற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தாரால் கொண்டு செல்லப்பட்டது என்று கூறிய அவர், ஆனால் அவர் எதையும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக நோயாளியை கவனிக்காமல் இருந்தார் என்றும்
மேற்படி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் எவரும் இல்லை மேற்படி மருத்துவமனையில் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை, பொருத்தமான செவிலியர் மற்றும் இதர வசதிகள் ஏதும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இல்லை என்றார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது சம்பந்தப்பட்ட நோயாளிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எந்தவிதமான தகவல்களும் வழங்கப்படவில்லை, புதிதாகத் திறக்கப்பட்ட மருத்துவமனையில் பொருத்தமான மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாமல் தேவையான சிகிச்சை வசதிகள் இல்லை. அன்று அரசு மருத்துவர் திருமதி ரஷியா மட்டுமே இருந்ததாகவும், மற்றபடி அந்த மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லை. மேனகாவின் மரணத்திற்கு அனைத்து காரணிகளும் குறைபாடுகளுமே காரணம் இந்தக் குறைபாடுகள் மற்றும் அலட்சியங்களுக்கு உயிரிழந்த மேனகாவின் உறவினர்கள் மீனா , ஆனந்த மோகனா உள்ளிட்டோர் சாட்சியாக உள்ளனர். உறவினர்கள் அனைவரும் மருத்துவர் மற்றும் செவிலியர்களை அணுகியபோது யாரும் அவர்களுக்கு நியாயமான பதில் அளிக்கவில்லை மற்றும் அனைத்து சிகிச்சைகளையும் கூற மறுக்கிறார்கள் என்றதோடு, மேனகாவின் இழப்பு அவர்களுக்கு சொல்லொணா கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்றும் அந்த அலட்சியத்தையும், அநியாயத்தையும் சம்பந்தப்பட்ட குடும்பம் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனவே, தமிழக அரசின் மருத்துவக் குழுமம் மற்றும் மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்னை குறித்து விசாரணை நடத்தி, எங்களுக்கு விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் அதுமட்டுமல்லாமல், இந்தப் பிரச்சினையில் உண்மைகளைக் கண்டறிந்த பிறகு, மருத்துவ வாரியம் மேற்கூறிய மணிமா மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் மற்றும் அவர்களின் மோசமான நிர்வாகம், மோசமான இடைநிலை வசதிகள், மோசமான அணுகுமுறை, அவர்களின் கடமைகளில் மருத்துவர்களின் அலட்சியம் போன்றவற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
தவறினால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் மணிமா மருத்துவமனையின் முன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
0 coment rios: